Pagetamil
உலகம்

லிபிய உயிரிழப்பு 20,000ஐ எட்டும்!

பேரழிவு வெள்ளத்திற்குப் பிறகு லிபிய நகரமான டெர்னாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக டெர்னாவின் மேயர் அப்துல்மெனாம் அல்-கைதி நேற்று (13) புதன்கிழமை தெரிவித்தார்.

டெர்னாவில் வசிப்பவர்கள் காணாமல் போன உறவினர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். அங்கு மீட்கப்படும் சடலங்களை வைப்பதற்கு,  உடல் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

லிபியாவை தாக்கிய டானியல் புயலையடுத்து ஏற்பட்ட பெரு வெள்ளம் இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தியது. பெரு வெள்ளம் ஏற்பட்டு, அங்குள்ள அணைக்கட்டு ஒன்று உடைந்தது. இதையடுத்து, நகர மத்தியிலிருந்த வறண்ட ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னர் நகரையே மூழ்கடித்தது.

ஆயிரக்கணக்கானவர்களை மத்திய தரைக்கடலுக்கு அடித்துச் சென்றுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் தாரெக் அல்-கர்ராஸ் புதன்கிழமை AFP செய்தி நிறுவனத்திடம், டெர்னாவில் இதுவரை 3,840 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதில் 3,190 பேர் ஏற்கனவே புதைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது 400 வெளிநாட்டினர், பெரும்பாலும் சூடான் மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

இதற்கிடையில், கிழக்கு லிபியாவை இயக்கும் நிர்வாகத்தின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் Hichem Abu Chkiouat, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதுவரை 5,300 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகக் கூறினார், மேலும் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது, இரட்டிப்பாக கூட இருக்கலாம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment