“கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு எப்போதும் ரஷ்ய அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழு மற்றும் நிபந்தனையற்ற ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியிலும் சுதந்திரத்தின் முன்னணியிலும் நாங்கள் எப்போதும் ரஷ்யாவுடன் நிற்போம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.” என ரஷ்யாவுக்கு சென்ற வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.
நேற்று (13) இரண்டு நாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சென்ற ரயில் ரஷ்யா – வடகொரியா எல்லையான காசானில் நிறுத்தப்பட்டது. அங்கு வடகொரிய தலைவரை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ் மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் வடகொரிய தலைவரை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கிழக்கு காஸ்மோட்ரோவில் உள்ள விண்வெளி மையத்தில் ரஷ்ய ஜனாதிபதியும், வடகொரிய தலைவரும் சந்தித்துப் பேசினர்.
நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின் போது, அதிநவீன விண்வெளி ரொக்கெட் ஏவுதளத்தை கிம்மிடம் காட்டிய புடின், வட கொரிய விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவது குறித்து விவாதித்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு கலந்து கொண்டார்.
இரு தலைவர்களும் மதிய உணவின் போது ஒருவரையொருவர் “தோழர்கள்” என்று அழைத்தனர்.
விண்வெயி மையத்தில் இரு தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது வடகொரியாவுக்கு விண்வெளி ரொக்கெட் துறையில் உதவுவீர்களா என செய்தியாளர்கள் புடினிடம் கேள்வியெழுப்பினர்.குறித்து விரிவான கேள்விகளை கேட்டார்.
“அதனால்தான் நாங்கள் இங்கு வந்தோம்.” என புடின் கூறினார்.
வடகொரியாவன் விண்வெளித்துறையை கட்டியழுப்ப, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் உதவி செய்யவுள்ளதாக புடின் கூறினார்.
விண்வெளி மையத்தை பார்வையிட்ட வடகொரிய தலைவர், பல சந்தேகங்களை கேட்டு தெளிவாகினார்.
இரு தலைவர்களிற்குமிடையிலான பேச்சில், உக்ரைனில் ரஷ்யா நடத்தும் பெயரை நீதிக்கான போர் என வடகொரிய தலைவர் வர்ணித்தார்.
வடகொரியாவிற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தடைகளை மீறும் வகையில் இரு தலைவர்களும் ஆயுத ஒப்பந்தங்கள் எதையும் பகிரங்கமாக வெளியிடவில்லை. ஆனால் கிம் வெளிப்படையாக மோதலைக் குறிப்பிடாமல் உக்ரைனில் கிரெம்ளின் போருக்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார்.
“கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு எப்போதும் ரஷ்ய அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழு மற்றும் நிபந்தனையற்ற ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
“ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியிலும் சுதந்திரத்தின் முன்னணியிலும் நாங்கள் எப்போதும் ரஷ்யாவுடன் நிற்போம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.” என்றார்.