யாழ்ப்பாணம், திருவேல்வேலியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை அதி சக்தி வாய்ந்த மருந்துகள் ஏற்றி கொலை செய்த அம்மம்மாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை இன்று பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மன்னாரை சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவ மாதான 53 வயதான பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்கொலைகள் எந்த பிரச்சினைகளிற்கும் தீர்வை தருவதில்லை. மாறாக, தற்கொலை செய்பவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு தீராத மன வலியையும், நிம்மதியின்மையையுமே ஏற்படுத்துகிறார்கள். திடீரென தோன்றும் தற்கொலை எண்ணங்களிற்கு ஆட்படாதீர்கள். உங்களுக்கு யாரும் துணையில்லையென சிந்திக்காதீர்கள். தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் உங்களுக்கு உதவ பல மையங்கள் உள்ளன. யாரேனும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் அல்லது வைத்திய ஆலோசனை தேவைப்படுமாக இருந்தால் 1925 என்ற துரித அழைப்பேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
சுமித்ரேயோ என்ற அமைப்பு இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க 0112682535 அல்லது 0112682570 ஆகிய தொலைபேசி இலக்கங்களையும் 1333 என்ற துரித இலக்கத்தையும் அறிவித்துள்ளது. 1926 என்ற தேசிய மனநல உதவி துரித அழைப்பு எண்ணுக்கும் அழைப்பேற்படுத்தி ஆலோசனை பெறலாம்.