இந்த மோசடி ஜோடியை பற்றி தகவல் தெரிந்தவர்கள் வழங்குங்கள்!

Date:

காணி விற்பனை செய்வதாக கூறி ஏமாற்றிய கணவன்-மனைவி தம்பதியை கைது செய்ய பொதுமக்கள் உதவி கோருகின்றனர்.

கண்டி, கட்டுகஸ்தோட்டை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் அவரது மனைவியும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான தம்பதியினர் பல்வேறு நபர்களிடம் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 9 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முத்துதந்திரியைச் சேர்ந்த ஜூட் பெர்னாண்டோ மற்றும் எகொடஹா ஹலிலாலாவைச் சேர்ந்த ஸ்ரீமதி திஸ்ஸகுமாரி ஆகியோரே பொலிசாரால் தேடப்படுகிறார்கள்.

இவர்கள் இருவரின் புகைப்படங்களும் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கண்டி தலைமையக பொலிஸ் பரிசோதகரை 071 8591045 அல்லது கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் 081 2222222 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்