அடாவடியாக மீன்பிடிக்க முயன்ற இராணுவத்துடன் கைகலப்பு!

Date:

வவுனியா கனகராயன்குள பகுதியில் உள்ள கரப்புகுத்தி குளத்தில் அத்துமீறி மீன்பிடிக்க முயன்ற இராணுவத்தினருக்கும் பொது அமைப்பினருக்கும் இடையே இடம்பெற்ற கைகலப்பில் இருவர் காயமடைந்து மாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. கரப்புக்குத்தியில் அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காக விலைக்கோரல் அடிப்படையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரப்புக்குத்தி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வலைகளைப்போட்டு சட்டவிரோதமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். குளத்தினை மீன்பிடிப்பதற்காகக் குத்தகைக்கு எடுத்தவர்களால் “மீன்பிடிக்க வேண்டாம்” என இராணுவத்திற்குத் தெரியப்படுத்தியபோதும் இராணுவத்தினர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து அப்பகுதிக்குச் சென்ற குளத்தினை குத்தகைக்கு எடுத்த பயனாளியும் அவரது நண்பரும் மீன்பிடிக்க வேண்டாம் என இராணுவத்தை மறித்த போது இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்த வாள்களால் தாக்கியுள்ளனர்.

இதில் கரப்புக்குத்தியைச் சேர்ந்த சிறீதரன் சுஜீபன் (29) என்ற இளைஞன் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

இதேவேளை, இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் மாங்குள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இச்சம்பவம் தொடர்பால் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...

விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்...

பிரகீத் எக்னொலிகொட வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தவை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, அதன் பின்னர் காணாமல் போன சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்