24.7 C
Jaffna
January 29, 2025
Pagetamil
இலங்கை

நல்லூர் முருகன் சப்பர திருவிழாவில் பெரும் நெரிசல்: பெண்களுடன் காமுகர்கள் கைவரிசை; வீதித்தடையை உடைத்த மக்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் நேற்று (12) இரவு ஏற்பட்ட சனநெரிசலால் திடீர் நெருக்கடி ஏற்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர் சப்பரத் திருவிழா நடைபெற்றது. இதன் பின்னர், பக்தர்கள் உள்நுழையவோ, வெளியேறவோ முடியாத வகையில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்ட நிலையில் மற்றைய சிவன்கோவில் பாதையிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக விலத்தப்படாத நிலையில் சனநெரிசல் அதிகரித்து பலர் மூச்சுத்திணறலால் அவதியுற்றதுடன் அம்புலன்ஸ் வண்டி வருவதிலும் நெருக்கடி ஏற்பட்டது.

இதனை சாதகமாக பயன்படுத்திய விஷமிகள் அங்க சேஸ்டையில் ஈடுபட்டதுடன், திருடர்கள் பெருமளவு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதுடன் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் பெருமளவான நகைகளும் குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு உடனடியாக கோவில் அருகில் ஆலயத்தினரால் போடப்பட்ட வீதித்தடைகளை தளர்த்தி பக்தர்கள் செல்ல வழி ஏற்படுத்தினர்.

பருத்தித்துறை வீதியை மறித்து நல்லூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினால் இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்ட பாதையும், ஆத்திரமடைந்த பக்தர்களால் உடைக்கப்பட்டது.

ஆலய பின்வீதியில் அமைக்கப்பட்டிருந்தவீதித்தடையால் ஏற்பட்ட நெரிசலால் 8 பேர் மயக்கமடைந்தனர். அவர்களை அழைத்து செல்ல நோயாளர் காவு வண்டி நுழைய முடியாத நிலை. இதையடுத்து, யாழ் மாநகரசபை சுகாதாரப்பகுதி அலுவலகத்துக்கு தூக்கிச் செல்லப்பட்டனர்.

நெரிசல் வாய்ப்பை பயன்படுத்தி பெருமளவான பெண்களுடன் காமுகர்கள் அத்துமீறியிருந்தனர். நெரிசல் காரணமாக பல பெண்களின் சேவைகள் கழன்றிருந்தன.

சப்பரத் திருவிழாவிலேயே இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டால் தேர்த்திருவிழாவில் இந்நிலை மோசமாகும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததுடன் இது தொடர்பில் யாழ் மாநகர சபை காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment