எரிபொருள் நிரப்பு நிலையத்தை நீதிமன்றம் தடை செய்ததற்கான காரணம்!

Date:

முல்லேரிய, அம்பத்தல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் சட்டத்திற்கு முரணானது என்பதனால் அதனை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பழைய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் அம்பத்தல புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் இடையில் 400 மீற்றர் தூரமே உள்ளதாகவும் மேலும் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இடையிலான நிலையான தூரத்தை விட குறைவான தூரம் எனவும் சங்கம் கூறுகிறது.

இதன்படி, பழைய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் உதவியை நாடிய போதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எட்டப்பட்டதாக சங்கம் மேலும் குறிப்பிடுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்