லிபியாவை தாக்கிய டானியல் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கில் பல கடலோர நகரங்களில் உள்ள அனைத்து சுற்றுப்புறங்களையும் மற்றும் வீடுகளையும் வெள்ளம் அழித்து விட்டதாகவும், 2,000 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்றும் நாட்டின் தலைவர்களில் ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக லிபியாவில் தொடரும் உள்நாட்டு மோதல், பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இந்த பேரழிவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது, லிபியா வெவ்வேறு இரண்டு போட்டி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்குப் பகுதி ஒரு தரப்பாலும், மேற்கு மற்றொரு தரப்பாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு போராளிக்குழுக்களையும் வெவ்வேறு வெளிநாடுகள் ஆதரிக்கின்றன.
Floods also hit Libya. 🇱🇾#flooding #Flood #floods #flood #Libia #lybia #WeatherUpdate #news #weatherwarning #klima #ClimateCrisis #clima #ClimateEmergency pic.twitter.com/1DIrLJAc82
— BoughyOfficial 🇮🇹 🇩🇪 🇷🇺 🇹🇻 (@Boughyofficial) September 11, 2023
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, வார இறுதி வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை பிற்பகுதியில் 61 ஆக இருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கையில் டெர்னா பகுதியைச் சேர்க்கவில்லை. ஏனெனில் அங்கு யாரும் செல்ல முடியவில்லை. அந்த பகுதியே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
நகரவாசிகள் ஒன்லைனில் வெளியிட்ட வீடியோ பெரும் அழிவைக் காட்டியது. மலைகளில் இருந்து நகரின் மையப்பகுதி வழியாக ஓடும் ஆறாக பாயும் வெள்ளம் முழு குடியிருப்பு பகுதிகளையும் அழித்து செல்கிறது. ஒரு காலத்தில் ஆற்றில் இருந்து வெகு தொலைவில் நின்று கொண்டிருந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் “புதிய ஆற்றில்“ அடித்துச் செல்லப்பட்டன அல்லது சேற்றில் இடிந்து விழுந்தன.
More severe flooding from #StormDaniel in #Libya pic.twitter.com/fSjclRqTAo
— Zoom Earth (@zoom_earth) September 10, 2023
திங்கள்கிழமை அல்-மசார் தொலைக்காட்சி நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், கிழக்கு லிபிய அரசாங்கத்தின் பிரதமர் ஒசாமா ஹமாட், டெர்னாவில் 2,000 பேர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் காணவில்லை என்றும் நம்பப்படுகிறது. டெர்னா பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கிழக்கை தளமாகக் கொண்ட நாட்டின் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் அல்-மோஸ்மரி, டெர்னாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியதாக ஒரு செய்தி மாநாட்டில் கூறினார். 5,000 முதல் 6,000 வரை காணாமல் போயுள்ளதாக அவர் கூறினார். அல்-மொஸ்மரி பேரழிவிற்கு அருகிலுள்ள இரண்டு அணைகள் இடிந்து விழுந்ததே காரணம், இதனால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் நீண்ட கால ஆட்சியாளர் மொஅம்மர் கடாபி வீழ்த்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். அதன்பின்னர் லிபியாவில் ஒரு மத்திய அரசாங்கம் இல்லை. இதன் விளைவாக சட்டம் ஒழுங்கின்மை நாட்டின் சாலைகள் மற்றும் பொது சேவைகளில் தலையிட முடியவில்லை. கட்டுப்பாடில்லாமல், தரமில்லாமல் சாலைகள், தனியார் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இலகுவில் இயற்கை பேரிடரில் அவை அழிகின்றன.
2018 இல் கிழக்கு அடிப்படையிலான அரசாங்கத்திற்கு விசுவாசமான படைகள் டெர்னாவை கட்டுப்படுத்தும் வரை, பல ஆண்டுகளாக தீவிரவாத குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்டது, ஒரு கட்டத்தில் ISIS க்கு விசுவாசமாக இருப்பவர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.
டெர்னாவில், மின்சாரம் அல்லது தகவல் தொடர்பு இல்லாத நிலைமை பேரழிவு தருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
கிழக்கு லிபியா அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் எஸ்ஸாம் அபு ஜெரிபா, டெர்னாவில் 5,000க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். பலியானவர்களில் பலர் மத்திய தரைக்கடலை நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
“நிலைமை துயரமானது,” என்று அவர் ஒரு தொலைபேசி பேட்டியில் அறிவித்தார். உள்ளூர் மற்றும் சர்வதேச ஏஜென்சிகள் நகரத்திற்கு உதவ விரைந்து செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
லிபியாவிற்கான ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜெட் காக்னன், ஆரம்ப அறிக்கைகள் டஜன் கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் “கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன … பரவலான வெள்ளம், உள்கட்டமைப்பு சேதம் மற்றும் உயிர் இழப்புகள்” என்று காட்டுகின்றன என்றார்.
“(புயல்) டானியல் நாட்டில் ஏற்படுத்திய கடுமையான தாக்கத்தால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன் … கிழக்கு லிபியாவில் உள்ள மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அனைத்து உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச பங்காளிகளும் கைகோர்க்குமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்,” என்று அவர் X தளத்தில் குறிப்பிட்டார்.
X இல் ஒரு இடுகையில், லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஐ.நா மற்றும் லிபிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வாறு உதவி வழங்குவது என்பதை தீர்மானிப்பதாகவும் கூறியது.
வார இறுதியில், லிபியர்கள் கிழக்கு லிபியா முழுவதும் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காட்டும் காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். வெள்ளம் மக்கள் வீடுகளுக்குள்ளும் வாகனங்களிலும் முற்றுகையிட்டதால் அவர்கள் உதவி கோரினர்.
கிழக்கு லிபியா அரசாங்கத்தின் பிரதம மந்திரி ஒசாமா ஹமாட், லிபியாவின் கிழக்கு கடற்கரையில் சிறிய வாடி டெர்னாவின் டெல்டாவில் அமைந்துள்ள நகரத்தின் பெரும்பகுதியை கனமழை மற்றும் வெள்ளம் அழித்த பின்னர் டெர்னாவை பேரழிவு மண்டலமாக அறிவித்தார். மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்த பிரதமர், நாடு முழுவதும் உள்ள கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டார்.
டானியல் புயல் மேற்கு எகிப்தின் சில பகுதிகளுக்கு திங்கள்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் நாட்டின் வானிலை அதிகாரிகள் சாத்தியமான மழை மற்றும் மோசமான வானிலை குறித்து எச்சரித்தனர்.