ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் பயணித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதினார்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் கம்பஹா மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த டி.ஐ.பெரேரா என்பவரே உயிரிழந்தார்.
இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரத சாரதிகள் இன்று ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை காரணமாக மக்கள் புகையிரதத்தை ஆபத்தான முறையில் பயன்படுத்துவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1