ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சலூன் கதவு கொள்கையைக் கொண்டுள்ளதாகவும், யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் அல்லது அவர் விரும்பினால் உள்ளே செல்லலாம் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொத்தடுவ கந்தே விகாரையில் நேற்று இடம்பெற்ற பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், சிலர் கூறுவது போன்று சுதந்திரக் கட்சியில் எந்த நெருக்கடியும் இல்லை. எங்கள் கட்சியில் இதுபோன்ற நெருக்கடிகள் இல்லை. நாங்கள் கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறோம். யார் வேண்டுமானாலும் வந்து போகலாம். எந்த தடையும் இல்லை. சனல் 4 இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை புறந்தள்ள முடியாது அது 100 வீதம் சரியா பொய்யா என்று கூற முடியாது. ஆனால், சனல் 4 வெளியிட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.
இதேவேளை, மற்றொரு சந்தர்ப்பத்தில் நேற்று கருத்து தெரிவித்த மைத்திரி, கட்சித் தலைமையை கைப்பற்ற தயாசிறி சதி செய்ததாலேயே அவரை நீக்கியதாகவும், அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.