இன்றைய வானிலை

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்