நடிகர் கார்த்தி WWE மல்யுத்த வீரர் ஜோன் சீனாவை நேரில் சந்தித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் ‘சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்கிற பெயரில் மல்யுத்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்துகிறது. இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் WWE மல்யுத்தப் போட்டி. இதில், மல்யுத்த வீரரும் நடிகருமான ஜோன் சீனா உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் 16 முறை WWE பட்டம் வென்ற ஜோன் சீனாவுடன் நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அத்துடன் “ஜோன் சீனா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி. சந்தித்த சில நிமிடங்களில் நீங்கள் அனைவரையும் சிறப்பாக உணரவைத்தது அற்புதம்” என கார்த்தி தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1