வெல்லவாய பொலிஸ் எல்லைக்குட்பட்ட கம்பங்குவ பிரதேசத்தில் நேற்று (07) இரவு நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளது. ‘ஹிஞ்சா’ என அழைக்கப்படும் 33 வயதுடைய நிலங்க சாமர என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள்.




