ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஷானி அபேசேகரவை பொறுப்பாக நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அந்த அதிகாரி மீது ஜனாதிபதியும் நம்பிக்கை தெரிவித்திருப்பதால், அது தொடர்பான விசாரணைகளை அவரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
பொறுப்பான அதிகாரியாக பெயர்பெற்ற ஷானி அபேசேகர, கோட்டாபயவின் மோசமான ஆட்சிக்காலத்தில் சோடிக்கப்பட்ட வழக்கில் து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் மீதான வழக்கு சோடிக்கப்பட்டது என உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருந்தது.




