முல்லைத்தீவு ஒட்டிசுட்டான்- மாங்குளம் வீதியில் நேற்று (5) நிகழ்ந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
21வது மைல் கல்லுக்கு அருகில் நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர்கள், வீதியில் நின்ற உழவியந்திரத்தின் பெட்டியுடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார்கள்.
முள்ளியவளை பொன்னகர் பகுதியினை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.
வீதியில் காய விடப்பட்ட நெல்லை ஏற்றிக் கொண்டிருந்த உழவியந்திரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
உழவியந்திரத்தின் உரிமையாளர் மற்றும் ஒருவர் ஒட்டுசுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.





