அரசாங்கம் முன்வைக்கும் பிரேரணைகள் மற்றும் கட்டளைச் சட்டங்களில் தேவையற்ற வகையில் தலையிட எதிர்க்கட்சிகள் தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதிக் குழுவானது, ஆய்வுகள், அவதானிப்புகள், தரவுகளைத் தேடுதல் மற்றும் தரவுகளை மையமாகக் கொண்ட அறிவியல் பகுப்பாய்வை மேற்கொள்ளும் ஒரு குழுவா? அல்லது “அரசு” மற்றும் “ஜனாதிபதி” என்ற வார்த்தைக்கு நடனமாடும் குழுவா? என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்கும் நாடு என்ற வகையில் நிதிக் குழுவை ஒன்றுக்கொன்று நடனமாடும் குழுவாக இருக்க முடியாது எனவும் நிதிக் குழுவின் தலைவர் பதவி கல்வி அறிவு மிக்கவருக்கே வழங்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். .
நிதிக் குழுவின் செயற்பாடுகளை ஆராய நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் முன் விவாதிப்பதற்கான தீர்மானம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.




