தான் மாரடைப்பால் இறந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் நடிகை ரம்யா தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில் சிலம்பரசன் நடித்த ‘குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா. திவ்யா ஸ்பந்தனா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், தொடர்ந்து ’கிரி’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘’சிங்கம் புலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். ‘பொல்லாதவன்’ மற்றும் ‘வாரணம் ஆயிரம்’ படங்களில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
நடிப்பிலிருந்து விலகிய அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 2013ஆம் ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில், நடிகை ரம்யா இன்று (6) மாரடைப்பால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது ஜெனீவாவில் இருக்கும் நடிகை ரம்யாவிடம், இந்த வதந்தி குறித்து விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், தான் ஜெனீவாவில் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தனக்கு தற்போது தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
It was really the strangest conversation, kept calling @divyaspandana and she didnt pick first few times and naturally I was panicking. Finally she did and I had to say-I am glad you are alive, She is like who the hell is saying I died! #DivyaSpandana
— Dhanya Rajendran (@dhanyarajendran) September 6, 2023




