கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவனை கையும் மெய்யுமாக பிடித்த மனைவி குடும்பத்தினர், அவரை கடுமையாக தாக்கி, பாதி மொட்டையடித்து வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
நாஜியா என்ற பெண், தனது கணவரான ஹுசைன் (30) கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிந்துள்ளார். கணவரை கையும் மெய்யுமாக பிடிக்க திட்டமிட்ட அவர், நேற்று திங்கள்கிழமை தனது தாயார், சில உறவினர்களுடன் சென்று கள்ளக்காதல் ஜோடியை பிடித்தனர்.
ஷபானா (32) என்ற பெண்ணுடன் ஹுசைனுக்கு கள்ளக்காதல் தொடர்பு இருந்தது. ஷபானா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்தார்.
ஷபானா, ஹுசைனை பிடித்த மனைவி நாஜியா குடும்பத்தினர், இருவரையும் தாக்கியுள்ளனர். பின்னர், இருவரையும் பாதி மொட்டையடித்து, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து கிராமத்தின் தெருக்களில் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து இந்துப்பூர் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி பி.கஞ்சக்ஷன் கூறுகையில், “ஹுசைன் ஷபானாவுடன் சட்டவிரோத உறவில் உள்ளார், இதனால் ஹுசைனின் மனைவி ஷபானா வசிக்கும் இடத்திற்கு சென்று இருவரையும் சரமாரியாக அடித்து ஊருக்குள் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.
அவர்கள் தலைமுடியை வெட்டுவது கமராவில் சிக்கியது. வீடியோ இணையத்தில் வைரலானது, அதில் ஹுசைன் மற்றும் ஷபானா கழுத்தில் ஒரு நூலில் கட்டப்பட்ட செருப்புகளைக் காண முடிந்தது.
பின்னர் இருவரையும் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றி, ஹுசைனின் சொந்த ஊரான பரிகி மண்டலில் உள்ள ஊதுகுரு கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு குடியிருப்பவர்கள் நாஜியாவையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக கஞ்சாக்ஷன் கூறினார்.
A woman and a man's half of hair was chopped-off by her husband and in-laws and ties sandals around necks and paraded in the village, as a punishment on the suspicion of having an illicit relationship with him, in Lepakshi mandal of Sri Sathya Sai dist. #AndhraPradesh #Inhuman pic.twitter.com/2uMvHZ77vb
— Surya Reddy (@jsuryareddy) September 4, 2023
நாஜியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக 506, 355, 323 போன்ற இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்தது, தவறான கட்டுப்பாடு, சிறைவைப்பு, அடக்கத்தை மீறுதல் மற்றும் பிற குற்றங்களுக்காக போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.