24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
சினிமா

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்!

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இப்படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது.

‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பலை காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். அதன்பிறகு இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் படத்தின் முதல் தொற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘800’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் நடிகர் மதுர் மிட்டல் இப்போது முத்தையா முரளிதரனாகவும், மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார். மும்பையில் நாளை மதியம் 2.45க்கு படத்தின் ட்ரெய்லரை சச்சின் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

Leave a Comment