மும்பையில் ஏர் இந்தியா பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்தவர் ரூபல் ஒகிரே (25). சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டுதான் ஏர் இந்தியாவில் விமானப் பணிப்பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மும்பையில் பணிப்பெண்ணாகப் பயிற்சி எடுத்துவந்தார். மும்பை அந்தேரியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தன்னுடைய சகோதரி, காதலனுடன் தங்கியிருந்தார். அவரின் காதலன் கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்.
அவரின் சகோதரியும் வெளியில் சென்றிருந்த நிலையில், அவரின் பெற்றோர் போனில் தொடர்புகொள்ள முயன்றனர். அவர் போனை எடுத்துப் பேசவில்லை. இதையடுத்து, அவரின் தோழிகளுக்கு போன் செய்து, என்ன ஆனது என்று பார்க்கும்படி கேட்டுக்கொண்டனர். ரூபல் தோழிகள் அவரது வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.
இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து கதவைத் திறந்தபோது, ரூபல் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். போலீஸார் அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
ரூபல் தங்கியிருந்த கட்டடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து, ரூபல் தங்கியிருந்த கட்டடத்தின் தூய்மைப் பணியாளர் விக்ரம் என்பவரைக் கைதுசெய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் விக்ரம் அத்வால் (40) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். “தனியார் வீட்டு பராமரிப்பு நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ஒரு குற்றவாளியை, தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்துள்ளோம். கொலைக்கான காரணம் மற்றும் காரணம் குறித்த கூடுதல் விவரங்களைப் பெற, அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறோம். அது,” என்று துணை போலீஸ் கமிஷனர் தத்தா நலவாடே கூறினார்.
போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். ரூபல் கழுத்து அறுத்துக் கொலைசெய்யப்பட்டிருந்தார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும்.