26.7 C
Jaffna
January 23, 2025
Pagetamil
உலகம்

உக்ரைனில் போரிட மத்திய ஆசிய குடியேற்றவாசிகளை ரஷ்யா பணியமர்த்துகிறது: பிரிட்டன் உளவுத்துறை

உக்ரைனியப் போருக்காக தனது ஆயுதப் படைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக  தனது சொந்த நாட்ஹடு பிரஜைகளை ஆட்சேர்ப்பு செய்வதை தவிர்த்து, அதற்குப் பதிலாக மத்திய ஆசிய புலம்பெயர்ந்தோர் மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யா தனது இராணுவத்தில் சேர்ப்பதாக பிரிட்டிஷ் உளவுத்துறை கூறியுள்ளது.

“ரஷ்யாவில் குறைந்தபட்சம் மத்திய ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் 6 மில்லியன் உள்ளனர். இவர்களை ஆட்சேர்ப்புக்கான சாத்தியமானவர்களாக கருதலாம்” என்று பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) அதன் சமீபத்திய உளவுத்துறை புதுப்பிப்பில் கூறியது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மக்கள் விரும்பாத மற்றொரு பொது அணிதிரட்டலைத் தவிர்க்க ரஷ்யா விரும்புகிறது என்று அமைச்சு கூறியது.

இந்த நடவடிக்கையானது, “கிரெம்ளின் பெருகிவரும் உயிரிழப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அதன் போர் முயற்சிகளுக்கு கூடுதல் பணியாளர்களைப் பெற அனுமதிக்கிறது. 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மேலும் செல்வாக்கற்ற உள்நாட்டு அணிதிரட்டல் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த ரஷ்யா முயல்கிறது. ரஷ்யா எந்த உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையையும் வழங்கவில்லை என்றாலும், அமெரிக்க அதிகாரிகள் கடந்த மாதம் ரஷ்யாவின் இராணுவ இழப்புக்கள் 300,000 ஐ நெருங்குவதாகவும், அதில் 120,000 பேர் இறப்புகள் மற்றும் 180,000 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். உக்ரைனும் இதேயளவு அல்லது அதிகமாக இழப்பை சந்தித்துள்ளது.

ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து, ரஷ்யா ஆர்மேனிய மற்றும் கஜகஸ்தானியர்களை குறிவைத்து இராணுவ விளம்பரங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது, முக்கியமாக கோஸ்டனே பிராந்தியத்தைச் சேர்ந்த ரஷ்ய இனத்தவர்களை குறிவைத்து இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இவர்களுக்கு 45,000 ரூபிள் ($5,140) சம்பளம் வழங்கப்படும். ஆரம்ப சம்பளம் 190,000 ரூபிள் ($1,973) வழங்குகிறார்கள்.

மேலும், உக்ரைனில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டால் அவர்களுக்கு “விரைவான குடியுரிமை” வழங்கப்படுகிறது, கார்டுகளில் $4,160 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

ரஷ்யாவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மத்திய ஆசிய குடியேற்றவாசிகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் கிரெம்ளினின் பார்வையில் “சாத்தியமான ஆட்கள்” என்று பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

“வெளிநாட்டு பிரஜைகளை சுரண்டுவது, அதிகரித்து வரும் இழப்புகளை எதிர்கொள்ளும் வகையில், கிரெம்ளின் தனது போர் முயற்சிகளுக்கு கூடுதல் பணியாளர்களை பெற அனுமதிக்கிறது,” என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சுஅறிக்கை கூறியது.

மோதலின் தொடக்கத்திலிருந்து உக்ரைனில் ரஷ்யப் போரின் முன்னேற்றம் குறித்த தினசரி புதுப்பிப்புகளை பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடுகிறது. எனினும், இது அனைத்து விடயங்களிலும் துல்லியமாக அமையவில்லை. இதேவேளை பிரிட்ன் உளவுத்துறை தவறான தகவலை பரப்புவதாக ரஷ்ய கூறி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 280,000 பேரை இராணுவத்தில் சேர்த்துள்ளதாக கூறினார்.

“பாதுகாப்பு அமைச்சின் தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 280,000 பேர் ஒப்பந்த அடிப்படையில் ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்துள்ளனர்” என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் மெட்வெடேவ் கூறினார் என்று டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

18,000 இந்தியர்களை வெளியேற்றவிருக்கும் அமெரிக்கா

east tamil

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி

east tamil

மூத்த ஹிஸ்புல்லா தலைவர் சுட்டுக்கொலை

Pagetamil

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

Leave a Comment