யாழ் பேதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கை அகற்றப்பட்டது; மருந்து செலுத்தியபோது விபரீதம்?

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியொருவருக்கு, சத்திரசிகிச்சையின் மூலம் மணிக்கட்டுடன் கையொன்று அகற்றப்பட்டுள்ளது.

நேற்று இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஊசி மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்ட kanila வினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இப்படியொரு சம்பவம் நடந்ததை உறுதி செய்தார்.

“கனிலா செலுத்திய போது அல்லது மருந்து செலுத்தும் போது, அருகில் இருந்த நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கையின் கீழ் பகுதிக்கு இரத்தம் செல்ல முடியாமல், கை செயலிழந்துள்ளது. இதனால் கையை அகற்ற வேண்டியேற்பட்டுள்ளது. அது தொடர்பான பூரண விசாரணை நடந்து கொண்டிருக்கிறது“ என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

ஈரானின் சிவப்பு கோடுகளை அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியுள்ளது!

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது சமீபத்திய பாகிஸ்தான் தூதரகப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்