அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தை தொடர்ந்து இலங்கையில் பல போக்குவரத்து சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கொள்கலன் ஏற்றிச் செல்வதற்கான கட்டணம் 5 வீதத்தால் அதிகரிக்கப்படும் என கொள்கலன் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று (செப். 01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை (செப். 02) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 4.01 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இருப்பினும், குறைந்தபட்ச கட்டணம் மாறாமல் இருக்கும் என்று மேலும் தெரிவித்துள்ளது.




