அனுமதி பத்திரத்திற்கு முரணாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர் வாகனங்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இராணுவத்தினரால் டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, சாரதிகளும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1