25.5 C
Jaffna
January 20, 2025
Pagetamil
சினிமா

நடிகை அபர்ணா நாயர் தற்கொலைக்கான காரணம் வெளியானது!

சினிமாவிலும் மலையாள டி.வி சீரியல்களிலும் நடித்துவந்த அபர்ணா நாயர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது தற்கொலைக்கான காரணத்தை பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கரமனா பகுதியில் வசித்துவந்தார் நடிகை அபர்ணா நாயர். 33 வயதான அவர், சினிமாவிலும் மலையாள டி.வி சீரியல்களிலும் நடித்து வந்தார். மேகதீர்த்தம், முத்துகெளவ், அச்சாயன்ஸ், கல்க்கி உள்ளிட்ட சினிமாக்களில் நடித்திருக்கிறார்.

மேலும், சந்தனமழை, ஆத்மசகி, மைதிலி மீண்டும் வருந்நூ, தேவஸ்பர்சம் உள்ளிட்ட டி.வி சீரியல்களில் நடித்துவந்தார்.

அவருக்கு சஞ்சித் என்ற கணவரும், த்ரியா, கிருத்திகா ஆகிய இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

நடிகை அபர்ணா நாயர் கரமனாவிலுள்ள வீட்டில் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அதையடுத்து உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இயற்கைக்கு மாறான மரணம் என கரமனா போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நடிகை அபர்ணா நாயர் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது சமீபத்திய ஃபேஸ்புக் பதிவுகளில் அது வெளிப்பட்டிருந்தது. ஒரு பதிவில், “அந்தப் பழைய நான் அல்ல இப்போது. ஏன் என்று தெரியாமல் அடிக்கடி கண்கள் குளமாகின்றன. தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். வெளிச்சத்தில் இருந்தாலும் இருட்டில் இருப்பதுபோன்று உணர்கிறேன். பழைய என்னை நான் மிஸ் பண்ணுகிறேன்” என அபர்ணா நாயர் பதிவிட்டிருந்தார். கடைசியாக அவர் மகளின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதே சமயம் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் ரிசெப்ஷனிஸ்ட்டாக வேலை செய்துவந்திருக்கிறார். குழந்தைகளைக் கவனிக்க யாரும் இல்லை என அவர் 15 நாள்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தூக்கிலிருந்து மீட்கப்பட்ட அபர்ணா நாயரை, அவர் கடைசியாகப் பணிபுரிந்த மருத்துவமனையில்தான் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். இதை அவருடன் பணிபுரிந்த சக பெண் ஊழியர்கள் வருத்தத்துடன் பகிர்ந்திருக்கின்றனர்.

அபர்ணா நாயரின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தைப் பற்றி போலீஸ் எஃப்ஐஆர் நிறைய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

அவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், இதுவே அவரது உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அபர்ணா கணவனால் ஓரங்கட்டப்படுவேனோ என்று அஞ்சினார், அதே சமயம் குடும்பம் தொடர்பான பிற பிரச்சனைகளும் அவரது கவலைகளை அதிகரித்தன.

அபர்ணாவின் சகோதரியின் அறிக்கையின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் தயாரிக்கப்பட்டது. இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அபர்ணா தனது தாயுடன் வீடியோ கால் செய்து, சிறு குடும்பக் குழப்பங்கள் ஏற்பட்டதையும், அவை தனது அச்சம் பற்றிய எச்ிசரிக்கையை ஏற்படுத்தியது பற்றியும் பேசியுள்ளார்.

தன் கணவனின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த அவர், தன் தாயிடம் கூட, தான் இந்த இடத்தை விட்டுச் சென்றுவிடுவதாகக் கூறியுள்ளார்.

அவரது தாயார் கூறுகையில், அபர்ணா பேசிக்கொண்டே போனில் அழுதார். நேற்று இரவு 7:30 மணியளவில் கரமனை கிள்ளிபாலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அபர்ணா அழைத்து வரப்பட்டார். அவர் வீட்டின் அறைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் உறவினர்களிடம் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment