நடிகர் வடிவேலுவின் தம்பி உடல்நலக்குறைவால் காலமானார்

Date:

நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் (52). இவர் ‘மலைக்கோவில் தீபம்’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால அவதிப்பட்டு வந்தார்.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (28) காலை விரகனூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வடிவேலு மதுரை செல்கிறார்.

வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக கடந்த ஜனவரி மாதம் காலமானார். இந்த சூழலில், தற்போது வடிவேலுவின் தம்பியும் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலுவின் தம்பி மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்