இன்று யாழ்ப்பாணத்தவரின் தலைக்கு மேல் சூரியன்!

Date:

இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தெற்கு நோக்கிய தொடர் நகர்வு காரணமாக இன்று முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி இன்று நண்பகல் 12.11 மணியளவில் யாழ்.மாவட்டத்தின் கோவிலான் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளில் சூரியன் நேரடியாக தலையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நவம்பர் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

இலங்கையில் நவம்பர் மாதம் வரை எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை...

அரச வெசாக் விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை...

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்