26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
மலையகம்

லிந்துலையில் 20 வயது இளைஞன் ஆற்றில் மூழ்கி மரணம்!

லிந்துலை பொலிஸ்‌ பிரிவுக்குட்பட்ட சென்‌ கூம்ஸ்‌ தோட்டத்தில்‌ சேர்ந்த 20 வயதுடைய
இளைஞன்‌ ஒருவர்‌ ஆற்றில்‌ தவறி விழுந்து நீரில்‌ மூழ்கியதால்‌ மரணம்‌ அடைந்தார்‌.

பிரபாகரன் கஜேந்திரன் என்ற இளைஞனும், மேலும் 2 நண்பர்களும் அருகில்‌ உள்ள காட்டுப்‌ பகுதிக்கு விறகு வெட்ட சென்று வீடு திரும்பிக்‌ கொண்டிருந்த போது வோல்ட்‌ ரீம்‌ தோட்டத்திற்கு அருகில்‌ உள்ள அல்ஜின் ஓயாவில் தனது கால்களை கழுவுவதற்காக சென்ற போது தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம்‌ இன்று பகல்‌ 1:30 மணி அளவில்‌ நடந்துள்ளது.

இது தொடர்பில் விந்துலை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிசாரும், பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடத்தினர்.

சுமார்‌ மூன்று மணித்தியாலங்களின்‌ பின்‌ நீரில்‌ மூழ்கிய இளைஞனின் சடலமாக மீட்கப்பட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம்‌ தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிசார்‌ முன்னெடுத்து வருகின்றனர்‌.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

Leave a Comment