27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

நாளை (28) தொடக்கம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை நண்பகல் 12.11 மணிக்கு கோவிலன் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பல பகுதிகளுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை” என அழைக்கப்படுவதை வெளியிட்டுள்ளது.

வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்ட சுட்டெண்ணின்படி, ‘எச்சரிக்கை’ நிலை என்பது நீண்டகால வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளால் சோர்வு சாத்தியமாகும். மேலும் வெப்பத்தினால் தசை பிடிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

அதன்படி, வெளியில் வேலை செய்வதை கட்டுப்படுத்தவும், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனிக்கவும், குழந்தைகளை வாகனங்களில் கவனிக்காமல் விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், அதிக நீர் பருகவும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து, அதிக நீர் பருகவும் பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

நாளை (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்க்கப்படுவதாக என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

Leave a Comment