27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

இனத்துக்காக தங்களை அர்ப்பணித்தவர்களை பராமரிப்பது எங்கள் கடமை!

ஒரு காலத்தில் இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் இன்று தங்களின்
அவயங்களை இழந்து எங்கள் முன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை
பராமரிக்க வேண்டியது எங்களின் கடமை என அனைத்துலக ஒலிபரப்பு
கூட்டுத்தாபனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இன்று (26) கிளிநொச்சி விவேகானந்த நகரில் அமைந்துள்ள வன்னி
விழிப்புலனற்றோர் சங்கத்தில் கௌரிசங்கரி தவராஜா ஞாபகார்த்த
அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளில்
சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உலருணவுப் பொதிகள் மற்றும் பிள்ளைகளுக்கு
காலணி என்பன வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே
அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் முன் உள்ளவர்கள் காலத்தின் தேவை கருதி எங்களுக்காக தங்களை
அர்ப்பணித்தவர்கள், எங்களுக்காக தங்களின் கண்,கை, கால்களை .இழந்தவர்கள்.
எனவே இவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்குண்டு.
அதன் காரணமாகதான் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராஜா அவர்கள் தனது
துணைவியாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வை முன்னிட்டு என்ன நிகழ்வை
ஏற்பாடு செய்யலாம் என வினவிய போது நான் அவரை இந்த இடத்திற்கு அழைத்து
வந்தேன்.

இங்கே இப்படியொரு சமூகம் இருப்பது பலருக்கு தெரியாது. இது மிகவும்
கவலைக்குரியது. எனவே இங்கு வருகை தந்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,
இவர்கள் கரினை கொள்ள வேண்டும், இவர்கள் பராமரிக்கப்பட வேண்டும் .

உலகையே அச்சுறுத்திய கொடிய கொரோனாவால் உயிரிழந்த சட்டத்தரணி கௌரி தவராஜா அவர்களை மக்கள் அதிகம் நேசிக்கின்றமைக்கு காரணம் அவர் இவ்வாறானவர்களை அதிகம் நேசித்தவர், தனது தொழில் வல்லமையை இனத்திற்காக பயன்படுத்தியவர் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா உள்ளிட்ட
ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

்க

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கச்சதீவு பெருவிழாவுக்கான ஏற்பாடு

Pagetamil

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

Leave a Comment