வவுனியா, நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது.
நேற்று (25) மாலை இந்த அனர்ந்தம் நிகழ்ந்தது.
மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளார். எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் அவரைத்தேடியுள்ளனர்.
கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் குழந்தை விழுந்திருந்ததை அவதானித்து, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராஜா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.
சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1