2023 உலக தடகள சாம்பியன்ஷிப் நடை போட்டியில் வீராங்கனையொருவர் எல்லைக்கோட்டை தொடும்போது, வீரரொருவர் முழந்தாளிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார்.
வீராங்கனை காதலை ஏற்றுக்கொள்ள, இருவரும் முத்தமிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ஆம் திகதி தொடங்கிய இந்த சாம்பியன்ஷிப் தொடர் வரும் 27ஆம் திகதி வரை நடைபெற்ற உள்ளது.
இதில் 35 கிலோமீற்றர் நடைபோட்டியில் ஸ்லோவாக்கிய வீராங்கனையான ஹனா புர்சலோவா கலந்துகொண்டார். ஹனா புர்சலோவா பந்தய தூரத்தை கடந்து, எல்லைக்கோட்டை எட்டியபோது, சக நாட்டு தடகள வீரரான டொமினிக் செர்னி, தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினார்.
Love's not a competition, but 🇸🇰's Dominik Černý and Hana Burzalova are winning today 🥰
What a moment after the 35km race walk finish 🙌#WorldAthleticsChamps pic.twitter.com/LUHQStQ2Uq
— World Athletics (@WorldAthletics) August 24, 2023
பர்சலோவா 35 கிமீ பந்தய நடையின் எல்லையை நெருங்கியபோது, செர்னி எதிரே சென்று முழந்தாளிட்டு நிச்சயதார்த்த மோதிரத்தை வெளியே எடுத்தார்.
புதிதாக நிச்சயதார்த்தம் செய்த ஜோடிக்காக அரங்கம் முழுவதும் ஆரவாரம் செய்தனர். செர்னி மோதிரப் பெட்டியை பந்தயம் முழுவதும் தன்னுடன் எடுத்துச் சென்றாரா அல்லது அதை எங்காவது பதுக்கி வைத்திருந்தாரா என்று ஒரு வர்ணனையாளர் ஆச்சரியப்பட்டார்.
செர்னியின் காதலை பர்சலோவா ஏற்றுக்கொண்டதையடுத்து, அவர் முஷ்டி உயர்த்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் இருவரும் முத்தமிட்டு அன்பை பரிமாறினர்.
ஆண்களுக்கான பந்தய நடைப் போட்டியில் டொமினிக் செர்னி 19வது இடத்தைப் பிடித்தார், அதே சமயம் பெண்கள் பிரிவில் ஹனா புர்சலோவா 28வது இடத்தைப் பிடித்தார்.
ஆண்களுக்கான 35 கிலோமீற்றர் நடைஓட்டத்தில் ஸ்பெயினின் மார்ட்டின் அல்வாரோ தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஈக்வடாரின் பிரையன் டேனியல் பின்டாடோ மற்றும் ஜப்பானின் மசடோரா கவானோ ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
பெண்களுக்கான போட்டியில் ஸ்பெயினின் மரியா பெரெஸ் தங்கப் பதக்கம் வென்றார். பெருவின் கிம்பர்லி கார்சியா லியோன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், கிரேக்கத்தின் ஆன்டிகோனி என்ட்ரிஸ்ம்பியோட்டி வெண்கலத்தை வென்றார்.