பலகோடி செலவழித்து சந்திரனை அடைந்த இந்தியாவின் மகிழ்ச்சியை குலைக்கும் கஞ்சத்தனமான கலாச்சாரம் இந்திய இளைய தலைமுறையில் இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கையர்களுக்கு அதுவும் ஒரு உதாரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியாவின் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் இந்தியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச உரையாற்றிய போது,
“எங்கள் அண்டை நாடான இந்தியா நிலவில் கால் பதிக்கும் நான்காவது நாடாக மாறியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், நன்றியுடன் இருக்கிறோம். மேலும், இந்தியா கோடிக்கணக்கில் இப்பணிக்கு செலவழிக்கும் போது, இந்தியாவில் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள், படிக்காத குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொல்லி அந்த மகிழ்ச்சியைக் குலைக்கும் அவல கலாச்சாரம் இந்திய இளைஞர் தலைமுறையில் இல்லையே என்று மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தியாவின் இளம் தலைமுறையினர் சாதி, இனம் எதுவாக இருந்தாலும் தேசியக் கொடியுடன், தேசியத்துடன் நிற்பார்கள். மற்றபடி நாட்டின் குறைகளால் அந்தச் சமூகம் நிலவில் இறங்கும் முயற்சியை கைவிடும் அவல நிலைக்குச் செல்லவில்லை. குறிப்பாக இந்திய சினிமா அங்கு சிறப்புப் பங்கு வகித்துள்ளது. இந்த நேரத்தில், நமது இளம் தலைமுறையும் இந்திய இளைஞர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.