பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் காதலியை கொலை செய்துவிட்டு, காதலன் தலைமறைவாகியுள்ளார்.
உயிரிழந்தவர் அடம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் விடுதியில் உள்ள படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று (23) மாலை களனி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் இந்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் இன்று காலை குறித்த பெண் அந்த அறைக்கு வந்துள்ளார்.
மாலை 4.30 மணியளவில் அங்கிருந்த ஆண் நபர் அசாதாரணமான முறையில் வெளியே சென்றதாக சந்தேகம் எழுந்ததையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அறையின் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்த ஊழியர் ஒருவர் இரத்தக் கறைகளைக் கண்டு பண்டாரவளைப் பொலிஸாருக்கு அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த இடத்தில் சந்தேகநபர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.