உக்ரேனியப் படைகளால் ரஷ்ய விமானநிலையங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களில் அணுஆயுதங்களை ஏந்திச் செல்லும் இரண்டு TU-22 குண்டுவீச்சு விமானங்களை அழித்ததோடு மேலும் இரண்டையும் சேதப்படுத்தியதாக உக்ரைனின் புலனாய்வுத் தலைவர் கூறினார்.
நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள சோல்ட்ஸி இராணுவ விமானநிலையத்தின் மீதான தாக்குதலில் அணுசக்தி திறன் கொண்ட TU-22M3 சூப்பர்சோனிக் நீண்ட தூர குண்டுவீச்சு விமானத்தை ரஷ்யா இழந்திருக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ உளவுத்துறை தெரிவித்திருந்தது.
“இரண்டு அழிக்கப்பட்டது, இரண்டு சேதமடைந்தன. இரண்டை சரிசெய்ய முடியாது, ”என்று உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் புதன்கிழமை இரவு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.
ஐந்தாவது ரஷ்ய விமானம் தாக்குதல்களில் தாக்கப்பட்டிருக்கலாம் என்று புடானோவ் கூறினார்.
“இவர்கள் ரஷ்ய பிரதேசத்தில் இருந்து சில பணிகளைச் செய்தவர்கள்,” என்று அவர் விமானங்களை அழித்த தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி கூறினார்.
சனிக்கிழமையன்று சோல்ட்ஸி விமானநிலையத்திலும், திங்களன்று கலுகா பகுதியில் உள்ள ஷைகோவ்கா விமானநிலையத்திலும் ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் தாக்குதலின் போது ஒரு போர் விமானம் சேதமடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.