மன்னார் அடம்பன் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 46 மற்றும் 52 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் கைத்துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலில் வெட்டுக்காயங்களும் காணப்பட்டன.
காலை 10.30 மணியளவில் கொலை சம்பவம் நந்தது.
உயிரிழந்தவர்களின் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்படவுள்ளன.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சில காலத்தின் முன் மாட்டுவண்டி சவாரி தொடர்பில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பான பகையினால் இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.