இலங்கைக்கான அமெரிக்கா தூதர் ஜூலி சுங் இன்று (23) யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஐயத்தின் போது பல்வேறு இடங்களிற்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து வருகின்றார்.
யாழ்ப்பாண நூலகத்திற்கு சென்ற ஜூலி, வடமாகாண ஆளுனரையும் சந்தித்தார்.
வடமாகாண ஆளுனராக பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்ற பின்னர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அமெரிக்க தூதர் சந்தித்து பேசிய சந்தர்ப்பம் ஒன்றில், வடக்கு ஆளுனர் பற்றி கேட்டார். அப்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அந்த குற்றச்சாட்டுக்கள் பற்றி விரிவாக பேசியிருந்தார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
1
+1
+1
+1