FIFA மகளிர் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் கோல் அடித்து ஸ்பெயின் அணிக்கு முதன்முறையாகக் கிண்ணத்தை வென்றுதந்த அணித் தலைவர் ஒல்கா கர்மோனாவின் (Olga Carmona) தந்தை உயிரிழந்தார்.
அவர் 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார். என்றாலும், உலகக்கிண்ண இறுதியாட்டம் முடியும் வரை மகள் ஒல்கா கர்மோனா விடம் இதை சொல்லாமலிருக்க குடும்பத்தினர் முடிவு செய்து, நேற்று போட்டி முடிவடைந்த பின்னர் தகவலை தெரிவித்துள்ளனர்.
நேற்று (20) நடைபெற்ற FIFA மகளிர் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் ஸ்பெயின் 1-0 என இங்கிலாந்தை வீழ்த்திக் கிண்ணத்தை வென்றது.
வெற்றிக்கான இந்த கோலை அடித்தவர் அணித் தலைவரன 23 வயது ஒல்கா கர்மோனா. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணியை ஓல்கா கார்மோனா வழிநடத்தி உலகக் கோப்பையை வென்றாலும், உலகக் கோப்பையை வென்ற சில நிமிடங்களில் வந்த ஒரு சோகமான செய்தியால் அவர் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த கர்மோனாவின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை (18) காலமானார்.
இறுதியாட்டத்தில் கவனம் சிதறாமல் விளையாடுவதை உறுதிசெய்யத் தந்தை இறந்த தகவலை கர்மோனாவிடம் தெரிவிப்பதில்லையென அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் முடிவு செய்துள்ளனர்.
போட்டி முடிவடைந்த சில நிமிடங்களில் கர்மோனாவிடம் தந்தை இறந்த செய்தியை அறிவித்ததாக ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.