நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது!

Date:

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று மிகவும் பக்தி பூர்வாமாக இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி கல்வியங்காட்டில் அமைந்துள்ள கொடிசீலை வழங்கும் செங்குந்தர் பரம்பரையை சேர்ந்தவரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று மங்கள வாத்தியம் சகிதம் கல்வியங்காடு வேல் மடம் முருகன் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.

அதனை தொடந்து வேல் மடம் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தில் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்