‘குருந்தூர் மலையில் ஆலயம் இருந்த இடத்திலேயே புதிய சிவன் ஆலயம் கட்டுவதென்றாலே அனுமதிப்போம்’: ஆலய நிர்வாகம் அறிவிப்பு!

Date:

முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயம் இருந்த இடத்தில் மீளவும் சிவன் ஆலயம் நிறுவுவதாக இருந்தால் மாத்திரமே மறவன்புலவு சச்சிதானந்தன் குழுவின் யோசனையை ஏற்போம். அதை தவிர்த்து, சட்டவிரோத விகாரைக்கு அங்கீகாரம் வழங்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலுடன், வேறு யோசனைகளை முன்வைத்து வந்தால், அவர்களின் யோசனையை கருத்திலும் எடுக்கமாட்டோம் என ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்கள் உள்ளன. அத்துடன், ஆதிசிவன் ஐயனாரும் அங்கு வழிபடப்பட்டு வந்துள்ளார். தமிழ் மக்களில் சிறிய குழுவினர் அப்பொழுது பௌத்த மதத்தையும் தழுவியிருந்தனர். அதன் பின்னரே சிங்கள பௌத்தம் நிறுவன மயப்பட்டது.

குருந்தூர்மலையிலுள்ள ஆதிசிவன் ஆலய வழிபாட்டு எச்சங்களை இரகசியமாக அழித்து, அந்த இடத்தில் சட்டவிரோதமாக சிங்கள பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் பரந்து விரிந்துள்ள வயல்வெளிகளில் அறுவடை முடிந்த பின்னர், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கலிடுவது தொன்றுதொட்டுள்ள வழக்கம்.

எனினும், தொல்லியல் திணைக்களம், இராணுவம், பொலிசார் இணைந்து கூட்டு நடவடிக்கையாக- கடந்த சில வருடங்களாக தமிழர்களின் பொங்கல் தடுக்கப்பட்டு வந்துள்ளது. எனினும், இம்முறை நீதிமன்ற அனுமதியுடன் தமிழர்கள் பொங்கி வழிபட்டனர்.

இதற்குள், குருந்தூர் மலை விவகாரம் பெறும் மத விவகாரம் என குதர்க்கம் பேசியபடி சிவசேனை மதவாத குழுவினர், குருந்தூர், தையிட்டியிலுள்ள சட்டவிரோத விகாரைகளின் விகாராதிபதிகள் உள்ளிட்டவர்களுடன் இரகசிய கலந்துரையாடல் நடத்தினார்கள். பின்னர், குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் அமைக்க பிக்குகள் அனுமதியளித்துள்ளதாக அறிவித்தனர்.

இது தொடர்பில் குருந்தூர்மலை ஆலய நிர்வாகத்தினரை தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “குருந்தூர்மலையில் பழைமை வாய்ந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் இருந்தது. அதன் எச்சங்களில் தொடர்ந்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. அவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன. ஆதிசிவனார் ஆலயமிருந்த அதே இடத்தில் மீளவும் சிவன் ஆலயம் அமைப்பதெனில் நாம் அதற்கு உடன்படுவோம். மாறாக, சட்டவிரோத விகாரைக்கு அங்கீகாரமளிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலுடன், வேறு யோசனைகளை கொண்டு வந்தால், சிவசேனையுடன் கலந்துரையாடலே நடத்த மாட்டோம்“ என்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்