கையடக்கத் தொலைபேசியை காதில் வைத்து பேசிக்கொண்டு ரயில் பாதையில் பயணித்த பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டகலைக்கும் ஹட்டனுக்கும் இடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதியுள்ளார்.
அந்த வகையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் அந்த புகையிரதத்தில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் சடலத்தை கொட்டகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
உயிரிழந்தவர் கொட்டகலை ருவன்புர பகுதியை சேர்ந்த சுப்பிரணியம் இமேசா என்ற 18 வயதுடையவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.




