Pagetamil
குற்றம்

யாழ் ரௌடிகள் புது ஐடியா… பெண்களின் ஆடை அணிந்து மாறுவேடத்தில் வந்து தாக்குதல்! (CCTV)

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள வீட்டின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு சேதம் விளைவித்தனர்.

கல்வியங்காட்டில் உள்ள பூதரவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள தரப்பே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி குறித்த வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்வியங்காட்டில் இவ்வாறான வன்முறை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றபோதும் குற்றவாளிகளோ வன்முறைக் கும்பலோ கைது செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment