மன்னார் மடு தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு, மனனார் கத்தோலிக்க ஊடகத்தின் இணைய தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் உயிரிழந்தமைக்கு, விச ஐந்து தீண்டியதே காரணமென்பது தரிய வந்துள்ளது.
மன்னார் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் டிரோன் என்ற 28 வயதுடைய நபரே நேற்று முன்தினம் (13) இரவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் நேற்று (14) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாம்பு தீண்டியதால் விசம் பரவி இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த இளைஞன் மடு மாதா ஆலய திருவிழாவை காணொளியாக எடுக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மடு தேவாலய வருடாந்த திருவிழா இன்று (15) நடைபெறவுள்ளது.