14 வயதுடைய தனது மகளை பணத்துக்காக மற்றவர்களிடம் பாலுறவுக்காக விற்ற தாயையும், பணம் கொடுத்து சிறுமியை வாங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர்கள் இருவiரயும் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர நேற்று (11) உத்தரவிட்டுள்ளார்.
14 வயதான இந்த சிறுமியும் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட திவுலபிட்டிய வெலகான பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதில் தொடர்புடையவர் திவுலபிட்டிய உல்லலபொல பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான கோரலேகே குணவர்தன எனவும் மற்றைய நபர் சிசிர பண்டார (42) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 வயதான சந்தேக நபர் தினக்கூலி பெறும் தொழிலாளி எனவும் மற்றைய நபர் டயர் கடை ஒன்றின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி மற்றும் இரண்டு ஆண் சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் பால்வினை நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பான அறிக்கையை பெற்று ஓகஸ்ட் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை மேற்பார்வையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை சிறுமியையை நீர்கொழும்பிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு திவுலப்பிட்டி பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸ் மா அதிபர் சந்திரசிறி ஹிரியதெனிய மேற்கொண்டு வருகிறார்.
சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் நான்கு பிள்ளைகளின் தாயான சந்தேக நபர் தனது வீட்டிற்கு ஆண்களை வரவழைத்து ஒவ்வொரு நபரிடமிருந்தும் ரூ. 2000 பெற்றுக்கொண்டு, மகளை அவர்களுடன் உடலுறவு கொள்ள வைத்துள்ளார்.
வீட்டில் வைத்தே மகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பொலிஸாரின் விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் ஆட்களை அழைத்து வரும் சந்தேகநபர், அந்த நபரையும் அவரது மகளையும் வீட்டுக்குள் வைத்து கதவுகளை மூடி காவலுக்கு நிற்பதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து விசாரணைகளின் முன்னேற்றத்தை ஓகஸ்ட் 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பதில் நீதவான் அதுல குணசேகர பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.