ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
சில நாட்களின் முன்னர் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த 12 வயது சிறுமி காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு வழங்கப்பட்ட உளவளச் சிகிச்சையின் போது அல்லைப்பிட்டி, வெண்புரவி நகரச் சேர்ந்த 25 வயதான இளைஞனால், தான் உட்பட நான்கு சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சிறுமியை சட்ட மருத்துவ அதிகாரி முன்பாக பொலிசார் நேற்று முன்தினம் முற்படுத்தியிருந்தனர். சிறுமியின் வாக்குமூலத்திற்கு அமைவாக சந்தேகநபரான 25 வயது இளைஞர் நேற் கைதானார்.