இராவணன் பற்றிய முழுமையான ஆய்வை செய்யவும்: நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை!

Date:

இராவண மன்னன் தொடர்பாக ஆராய்ந்து முழுமையான வரலாற்று தகவல்களை வெளிக்கொண்டு வர வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இன்று (11) நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை சமர்ப்பித்தார்.

இராவணன் தொடர்பில் பல்வேறு குழப்பமான தகவல்கள் உள்ளன. இது தொடர்பில் ஆராய வேண்டுமென்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணணன்-

இராவணன் இந்த நாட்டின் அரசன் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. இராவணனை ஏற்றுக்கொண்டால் இராமனையும், சீதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இராமாயாணத்தை ஏற்க வேண்டும். இராமாயாணம் இலங்கைக்கு வருமானத்தை ஈட்டக்கூடியது. இராமாயாணத்துடன் தொடர்புடைய இடங்களை பார்க்க இந்தியாவிலிருந்து பெருமளவானவர்கள் வருகிறார்கள்.

அயோத்தியில் கட்டப்படும் கோயிலுக்கு நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் கோயிலில் இருந்து கல் அனுப்பப்பட்டது.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இராமாயணம் பாலமாக அமைந்தது என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்-

ஈழத்தில் தமிழனாக வாழ்ந்த இராவணேஸ்வரனே இராமாயாணத்தின் முக்கிய கதாபாத்திரம். இலங்கையின் ஆதிக்குடிகளாகிய நாகர் என்ற தமிழரே இராவணன். தாயின் அந்திம கிரியைகளை செய்ய கன்னியா வெந்நீரூற்றை வெட்டினார். அங்கிருந்து பார்க்கும் போது 60 அடி நீளமான சமாதியுள்ளது. அது இராவணனுக்கும், தாய்க்கும் உரியது. இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தமிழர்கள் தோன்றி வளர்ந்த இடங்கள். பூநகரியின் கௌதாரிமுனை 2700 ஆண்டுகளுக்கும் அதிகமாக தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வரும் இடம். பலாங்கொடையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்- நாகர்கள். வெிஜயன் வந்தபோது குவேனியும் சமூகத்தினரும் தமிழர்களாக வாழ்ந்தனர்.  இராவணன் பற்றிய ஆய்வை செய்யும் போது. இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பது தெரிய வரும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர-

இராவணனை தமிழ் மன்னண் என இங்கு குறிப்பிடுவதை கேட்டு வெட்கப்படுகிறேன்.

spot_imgspot_img

More like this
Related

அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று வங்கிக் கணக்கில் பணம் வைப்பு!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நவம்பர் மாத அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு...

WWE வீரர் பிரான்சன் ரீட் காலமானார்

WWE நிறுவனம், அதன் சூப்பர் ஸ்டார் பிரான்சன் ரீட் (Bronson Reed)...

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்