வர்த்தக நிலையத்தை வாடகைக்கு பெற்றது தொடர்பான தகராற்றில் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டும், கத்தியால்குத்தியும் கொல்லப்பட்டுள்ளார்.
கொலை சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா பிரதான வீதியைச் சேர்ந்த கே.ராமசுந்தர் (54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு சொந்தமான கடையொன்று மேற்படி வியாபாரியினால் வாடகைக்கு பெறப்பட்டு, வர்த்தக நிலையம் நடத்தப்பட்டது.
ஒப்பந்தம் நிலைவடைந்தும் வர்த்தக நிலையம் மீள ஒப்படைக்கப்படவில்லை.
இது தொடர்பான வாக்குவாதத்தில் சகோதரர்களால் அவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேற்கண்ட இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.