யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.
தமிழகம் வேதாரண்யம் அருகே மணியன்தீவு கிராமத்திற்கு கிழக்கே சுமார் 4 நொட்டிக்கல் மைல் தொலைவில் இன்று (9) மதியம் 2 மணியளவில் கரையொதுங்கினார்கள்.
அற்புதராஜா ஸ்ரீகாந்தன் (37 ), ஆனைகோட்டை, சு.சிவகுமார் (25) வல்வெட்டிதுறை, போல் ரொபின்சன் ரீகன் (40), குருநகர்- ஆகிய மீனவர்களே இவ்வாறு கரையொதுங்கினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எழுவை தீவில் இருந்து கடந்த 6 ஆம் திகதி காலை சுமார் 9 மணியளவில் மீன் பிடிக்க புறப்பட்டவர்கள் படகு இயந்திரம் பழுதாகியதால் கடலில் நங்கூரமிட்டதாகவும், எனினும் காற்றின் வேகத்தால் இந்த பகுதிக்கு வந்து விட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
எனினும். சட்டவிரோத வர்த்தக நோக்கம் எதற்காகவும் வந்தார்களா என்ற கோணத்திலும் பொலிசார் தடுத்து வைத்து விசாரிக்கிறார்கள்.




