தமிழகத்தில் கரையொதுங்கிய இந்த யாழ்ப்பாண இளைஞர்கள் யார்?

Date:

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 மீனவர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.

தமிழகம் வேதாரண்யம் அருகே மணியன்தீவு கிராமத்திற்கு கிழக்கே சுமார் 4 நொட்டிக்கல் மைல் தொலைவில் இன்று (9) மதியம் 2 மணியளவில் கரையொதுங்கினார்கள்.

அற்புதராஜா ஸ்ரீகாந்தன் (37 ), ஆனைகோட்டை, சு.சிவகுமார் (25) வல்வெட்டிதுறை, போல் ரொபின்சன் ரீகன் (40), குருநகர்- ஆகிய மீனவர்களே இவ்வாறு கரையொதுங்கினர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எழுவை தீவில் இருந்து கடந்த 6 ஆம் திகதி காலை சுமார் 9 மணியளவில் மீன் பிடிக்க புறப்பட்டவர்கள் படகு இயந்திரம் பழுதாகியதால் கடலில் நங்கூரமிட்டதாகவும், எனினும்  காற்றின் வேகத்தால் இந்த பகுதிக்கு வந்து விட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

எனினும். சட்டவிரோத வர்த்தக நோக்கம் எதற்காகவும் வந்தார்களா என்ற கோணத்திலும் பொலிசார் தடுத்து வைத்து விசாரிக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்