மீண்டும் மின்சார கட்டணம் உயர்கிறது?

Date:

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணத்தை உடனடியாக மீண்டும் ஒருமுறை அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் இவ்வருடத்தின் அடுத்த சில மாதங்களில் செலவினங்களைச் சமாளிக்க முடியாது என மின்சார சபையின் பொது முகாமையாளர் கடந்த 21ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மின்சார சபை மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை சமர்ப்பித்தாலும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணமே கடந்த முறை உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு போதுமானதல்ல, இந்த வருடம் மின்சார சபையின் வருமானம் 3,300 கோடி ரூபாவால் குறைந்துள்ளதாக பொது முகாமையாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்காக, பிற கடன்தாரர்களுக்கு, மின் கட்டண வாரியம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்காக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து எழுபது கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வருடம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போது 4,500 ஜிகாவோட் நீர் மின்சாரம் பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வறட்சியான காலநிலை காரணமாக 1,738 ஜிகாவோட் மின்சாரத்தையே பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரட்சி நிலை காரணமாக எதிர்காலத்தில் அனல் மின் உற்பத்தி அதிகரிக்கலாம் எனவும், இவ்வாறான நிலையில் சபையின் செலவினங்களை சந்திப்பது பாரிய பிரச்சினை எனவும் மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்